Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Wednesday, 5 September 2012

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் கதிரின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா… அடடா…

(என்ன சத்தம்..)

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனந்த கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தை பார்த்தல் மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தால் ஒரு பூப்போலே
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு
ஆரிரரோ, இவர் யார் எவரோ, பதில் சொல்வார் யாரோ

(என்ன சத்தம்..)

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உணர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ
மங்கையிவள் வாய்திறந்தால் மல்லிகைப்பூ வாசம்
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யார் இவர்கள் இரு பூங்கொடிகள் இளம் காதல் மான்கள்

(என்ன சத்தம்..)

No comments:

Post a Comment