நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாய் ஆகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயக்யாதி யுடையாள் சரணம்.. சரணம்..
சரணம்.. சரணம்.. சரணம்.. சரணம்..
பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க..
ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே
வழி வருக வழி நெடுக ஒழி நிறைக வாழ்விலே
பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க..
இடன் கொண்டு விம்மி.. இணை கொண்டு இறுகி..
இடன் கொண்டு விம்மி.. இணை கொண்டு இறுகி..
இளகி, முத்து வடன் கொண்ட கொங்கை மலை கொண்ட
இறைவர் வலிய நெஞ்சை நடன் கொண்ட
கொள்கை நலம் கொண்ட நாயகி,
நல்ல அரவின் படம் கொண்ட அன்பு பணிமொழி
வேதப் பரிபுரையே!! வேதப் பரிபுரையே!!
பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க!!
No comments:
Post a Comment