Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Saturday, 19 May 2012

கரை காணா கடல் மேலே நீயும் நானும்

விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்.

கரை காணா கடல் மேலே நீயும் நானும்
தடுமாறும் ஓடம் போல் தாவிப்பார்த்தோம்
என்னானாலும் ஏற்பதுதான் வாழ்க்கையம்மா

தத்தி தத்தி நீரில் ஆடி சுத்தி
சுத்தி சுழலும் போதும்
அக்கரைக்கு போகத்தானே அல்லாடும்

எத்தனையோ புயலும் கண்டு
கொட்டும் மழையில் பொறுமையும் கொண்டு
தொலை தூரம் சேரத்தானே தள்ளாடும்

தன்னோட வழி எல்லாம் தன்னைத்தவிர துணையுண்டா
திசையெல்லாம் வழியாகும் ஒருவழிதான் உனக்காகும்
எப்போது கரையைச்சேரும் ஓடம் ஓடம்?

கட்டுமரம் என்றால் என்ன
வெட்டுப்பட்ட மரங்கள்தானே
கஷ்டப்படும் நீயும் நானும் அது போலே

பட்டபாடு அலைகள் போலே
விட்டு விட்டு மோதிப்பார்க்கும்
எட்டி நிற்கத் திரும்பத்திரும்ப விளையாடும்

கடலிருந்தும் கட்டுமரம் ஆழத்தை அறியாது
கடல்சேரும் நதியெல்லாம் திரும்பித்தான் போகாது
முடிவில்லா முடிவுக்கேது முடிவு முடிவு?

No comments:

Post a Comment